சேப்பாக்கத்தில் உதயநிதி வெற்றி...பெரம்பூரில் விஜய் வெற்றி!

விஜய் பெரம்பூர் தொகுதியில் சுமார் 40,000 வித்தியாசம் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் சுமார் 26,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். அவர் சுமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார். முன்பு பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதியிலும் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது தவெகவினரிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் பெற்ற 26,000 வாக்கு வித்தியாசம், தவெகவின் வலுவான எழுச்சியை பிரதிபலிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் வெற்றி பெற்றாலும், திமுக கூட்டணிக்கு இது ஆறுதல் அளிக்கும் முடிவாகக் கருதப்படுகிறது. ஆனால் விஜய்யின் இரட்டை வெற்றி தமிழக அரசியல் சமன்பாட்டை மாற்றியமைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், தவெக தலைவர் விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்று பார்க்கப்படுகிறது.