விஜயின் இன்றைய பிரச்சாரம் ரத்து...காரணம் என்ன?

தவெக தலைவர் விஜய்யின் இன்றைய பரப்புரை ரத்து என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய்யின் இன்று சென்னையில் திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விதித்திருந்த கால நிபந்தனைகளை கடைபிடிக்க இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும், தி.நகர் பகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், கொடுக்கப்பட்ட இந்தக் குறுகிய நேரத்திற்குள் பிரச்சாரத்தை முழுமையாக முடிக்க முடியாது என்று த.வெ.க தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

விஜய் ஏற்கனவே புதுச்சேரி, திருச்சி, பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் இன்று நடைபெற இருந்த இரு முக்கிய பிரச்சார நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது த.வெ.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளே இந்த ரத்து முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விஜய்யின் அடுத்தகட்ட பிரச்சாரத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் நெருங்கி வரும் இந்த கட்டத்தில், விஜய்யின் பிரச்சார அட்டவணையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது

விஜயின் இன்றைய பிரச்சாரம் ரத்து...காரணம் என்ன?