பாஜகவால் களமிறக்கப்பட்டவர் விஜய்-திருமாவளவன் அட்டாக்!

சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க பாஜகவால் களமிறக்கப்பட்டவர் விஜய் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Hero Image

கும்பகோணம் : விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவரும், திருச்சி துறையூர் தொகுதி வேட்பாளருமான தொல். திருமாவளவன், கும்பகோணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசுகையில், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.திருமாவளவன் பேசியதாவது "இஸ்லாமியர்களின் வாக்குகளையும், கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் திமுக கூட்டணிக்குப் போகவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினரால் திட்டமிட்டு களவிளைக்கு விடப்பட்டிருப்பவர் தான் நண்பர் விஜய்.

அவர் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகப் போகின்றன. அவர் இதுவரை பேசிய அரசியல் ஒன்றே ஒன்றுதான். திமுக வெறுப்பு. திமுக வெறுப்பு. திமுக வெறுப்பு. எல்லா மேடைகளிலும் திமுகவை வெறுத்துப் பேசுகிறார். திமுகவை வீட்டில் ஆட்சி பீடத்தில் இருந்து அப்புறப்படுத்துவேன். ஸ்டாலினை தோற்கடிப்பேன். அவரை வீட்டுக்கு அனுப்புவேன்.

இதைத் தவிர விஜய் வேறு எதாவது பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? சமூகநீதியைப் பற்றி பேசியிருக்கிறாரா? சகோதரத்துவத்தைப் பற்றி பேசியிருக்கிறாரா? சமத்துவத்தைப் பற்றி பேசியிருக்கிறாரா? பிஜேபியை கண்டித்திருக்கிறாரா? அமித்ஷாவை விமர்சித்திருக்கிறாரா? மோடியை விமர்சித்திருக்கிறாரா?

ஜனநாயகத்தை தடை செய்தது பிஜேபி அரசுதான் என்று சொல்லி இருக்கிறாரா?அவருக்கு பிஜேபி குங்கை எதிரி என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டார். அவருடைய நோக்கம் என்ன? திமுகவை தோற்கடித்து திமுக கூட்டணியைத் தோற்கடித்து எப்படியாவது அதிமுக-பாஜக கூட்டணியின் அரசை இந்தத் தேர்தலில் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.அவர் வெற்றி பெறுவது அவருடைய நோக்கமில்லை. அவருக்கு ஆட்சியை கைப்பற்றுவது அவருடைய நோக்கமில்லை.

திமுக கூட்டணியை வீழ்த்துவதுதான் அவருடைய நோக்கம். இதை தவிர வேறு நோக்கம் இல்லை. அவரே சொன்னது. அவரே சொல்லிக் கொண்டிருப்பது. அவரே பேசிக் கொண்டிருப்பது. அவரே முழங்கிக் கொண்டிருப்பது. மண்டி இட்டுப் போய் தேவாலயத்தில் வழிபாடு செய்கிறார். மக்களை ஏய்ப்பதற்காக? இஸ்லாமியர்களின் வாக்குகளையும், கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் திமுக கூட்டணியில் போகவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினரால் திட்டமிட்டு களவிளைக்கு விடப்பட்டிருப்பவர் தான் நண்பர் விஜய்.

அவருக்குத் ஓட்டு போடுகிறார்களா? அப்படி அவருக்கு ஓட்டு போட்டாலும் அது பிஜேபிக்கு போட்டதாகத்தான் வரும். அவருடைய வேட்பாளர்களுக்கு வாக்களித்தாலும் அது பிஜேபிக்கு வாக்களித்ததாகத்தான் வரும். அதனால்தான் அண்ணன் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு வெல்லட்டும்’ என்று சொன்னார். திமுக வெல்லட்டும் என்று சொன்னதில்லை. அதிமுகவை எதிர்த்து திமுக போட்டியிடுகிறது.

எனவே எடப்பாடியை வீழ்த்தவிட்டு ஸ்டாலின் வெற்றி பெறுவேன் என்று சொன்னார்.தமிழ்நாடு பிஜேபி அரசை எதிர்த்து போரிடுகிறது. அதற்கான யுத்தம் தான் இந்தத் தேர்தல். முகமூடி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

அதிமுக பெயரிட. பாமக. உடைந்த பாமக பெயரிட. உடைந்த அதிமுகவிலிருந்து உருவான டிடிவி தினகரன் கட்சியின் பெயரிட. அதன் ஜி.கே. வாசன் பெயரிட. அவர்கள் பாஜகக்காரர்கள், RSSக்காரர்கள். முகமூடி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.அதனால்தான் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ‘நாங்கள் எதிர்ப்பது அதிமுகவை அல்ல. நாங்கள் எதிர்ப்பது உடைந்த பாமகவை அல்ல. நாங்கள் எதிர்ப்பது டிடிவி தினகரனை அல்ல. நாங்கள் எதிர்ப்பது டெல்லியில் இருக்கிற பாஜக அரசை தான்’ எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாஜகவால் களமிறக்கப்பட்டவர் விஜய்-திருமாவளவன் அட்டாக்!