தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களை கௌரவிக்க TVK தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

TVK MAANADU

சென்னை :கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கு திடல் மற்றும் பார்க்கிங்காக நிலம் தந்த விவசாயிகளை அழைத்து நன்றி கூறும் வகையில் விருந்தும் வழங்கிட தவெக தலைவர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அட ஆமாங்க.. தவெக மாநாட்டுக்காக பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக 230 ஏக்கர் நிலம் வரை விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வழங்கியிருந்தனர்.

அந்த நிலங்களை வழங்கிய சுமார் 25 பேரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்து விஜய் கவுரவிக்கிறார் என்று கூறப்படுகிறது. அத்துடன், நிலம் தந்தவர்களுக்கு விஜய் தனது கைகளால் உணவு பரிமாறுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.