சென்னை : சட்டப்பேரவையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி மற்றும் அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றபோது, இதில் அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதங்களும் விமரிசனங்களும் வெடித்தன.
அமர்வு தொடங்கியதும், மின்சாரத்துறை செயல்பாடுகள் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, துறை சார்ந்த சில கருத்துக்களை முன்வைத்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய எரிசக்தித்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கடந்த காலங்களில் மின்சார வாரியம் எதிர்கொண்ட சவால்களைப் பட்டியலிடத் தொடங்கினார். அப்போது, செந்தில்பாலாஜியைக் குறிப்பிடுகையில் அவரை "கரூர் கம்பெனி ஓனர்" என்று கூறிவிட்டு , உடனடியாகத் திருத்தி "முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி" என்று தன் பேச்சைத் தொடர்ந்தார்.
இதற்குக் குறுக்கிட்டு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் "மாண்புமிகு சங்கி அமைச்சர்" என்று குறிப்பிட்டுவிட்டு, உடனே சுதாரித்துக்கொண்டு "மன்னிக்கணும், எரிசக்தித்துறை அமைச்சர்" என்று கூறினார். இது அவையில் பெரும் பரபரப்பையும் கூச்சலையும் ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், பாத்ரூமில் 3 மணிநேரம் அமர்ந்து இருந்த மாண்புமிகு எதிர்கட்சி தலைவர்னு நாங்களும் சொல்லலாம்" என்ற தொனியில் பதிலளித்தார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் யார் எங்கு எவ்வளவு நேரம் இருந்தார்கள் என்பதைக் கண்காணிக்க அரசு ஒரு பிரத்யேக அமைச்சரை நியமித்துள்ளதா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். மானியக்கோரிக்கை விவாதத்தின் போது இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்த வார்த்தைப் போர் அவையில் பெரும் சலசலப்பை உண்டக்கியது.
