நாங்க முடிவு எடுப்போம் ,அதிமுகவில் இருந்து சீலிப்பர் செல்கள் வெளியே வருவார்கள் ...!தினகரன் அணி அதிரடி

அதிமுகவில் இருந்து சீலிப்பர் செல்கள் வெளியே வரத் தொடங்குவார்கள்  என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர்  தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து சீலிப்பர் செல்கள் வெளியே வரத் தொடங்குவார்கள்  என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர்  தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

unknown node

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.

unknown node

ஆனால் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கூறுகையில், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.மேலும்  தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 18 பேரின் கருத்தை கேட்ட பிறகு அடுத்த கட்ட முடிவை அறிவிப்போம். பல தியாகங்களை செய்துவிட்டு 18 பேரும் எங்களுடன் இருக்கிறார்கள்.அதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  தெரிவித்தார்.

unknown node

இந்நிலையில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர்  தங்கதமிழ் செல்வன் தீர்ப்பு தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு தொடர்பாக இன்று காலை அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் .அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சீலிப்பர் செல்கள் வெளியே வரத் தொடங்குவார்கள்  தற்போது, தங்களுடன் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர்  தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.