வானிலை மையம் அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, கேரளா, மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மினிக்காய் தீவுகளில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து வரும் நாட்களில் வலுவிழக்கும் எனக் கூறிய அவர், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.