இன்று வானிலை எப்படி இருக்கும்? முக்கிய தகவலை கொடுத்த டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குளிர் அதிகமாக இருக்கும் நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

weather update news

சென்னை :வட இந்தியாவில் நிலவும் வலுவான உயரழுத்ததின் வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகம் உள்பட தென் இந்தியாவில் குளிர் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், தேனி, தென்காசி மதுரை, விருதுநகர் போன்ற உள் மாவட்டங்களில் இரவுஅதிகாலை நேரத்தில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 16°© முதல் 18°© செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது.

வால்பாறை, உதகமண்டலம், கொடைக்கானல் பகுதிகளில் வெப்பநிலை 8°© கீழ் குறைவதற்கும், உறைப்பனி நிலவுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் வெப்பநிலை 18-21°© அளவிற்கு குறைந்து காணப்படும்.

விவசாயிகளுக்கான தகவல்: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு டிசம்பர் 15ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், மழைக்கான வாய்ப்புகள் இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் உரமிடுதல், பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு, நடவு/தெளிப்பு போன்ற அனைத்தையும் திட்டமிடலாம்.

ஈரப்பதமான கீழைக்காற்றின் ஊடுருவல் அந்தமான் வரை முன்னேறியுள்ளது. டிசம்பர் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் பரவலாக கடலோரம் & உள் மாவட்டங்களில் பனிப்பொழிவு குறைந்து மழை வானிலை திரும்பும் எனவும், டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அதே சமயம், சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.