ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Former AIADMK minister Jayakumar said that Rajendra Balaji was not in hiding.

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தமிழுக்கு எந்த தொண்டும் ஆற்றாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்துள்ளது திமுக அரசு. உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அவர் தலைமறைவாக இல்லை என்றும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார், ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.