CBI விசாரணை என்றால் அண்ணன் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை கேள்வி!

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

annamalai seeman

சென்னை :கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன் என காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் ” பொதுவாகவே, CBI விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை எங்கள் காவல்துறை விசாரணையில் என்ன குறை? சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூளை இருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் சிபிஐ விசாரித்து நிரூபித்த பெரிய வழக்கு எதாவது இருக்கிறதா? கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது எதற்கு என கேள்விகளை முன் வைத்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எதையாவது பண்ணி விஜயை அதிமுக பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும், அவரை உள்ளே போக விட்டுவிடக்கூடாது என்று ஒரு தரப்பும் செயல்பட்டு வருகிறார்கள் ” எனவும் சீமான் தெரிவித்தார்.

அவர் பேசியதை தொடர்ந்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது, யாரு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கவில்லை எனவும், கரூர் சம்பவத்தில் சீமான் பதட்டபடுவதற்கான காரணம் என்ன ? எனவும் சீமானை நோக்கி கேள்விகளை எழுப்பினார். மேலும்,மற்ற விவகாரங்களில் முதல்வர் சிபிஐ விசாரணை கோரியபோது சீமான் கருத்து தெரிவிக்காதது ஏன்? எனவும் அண்ணாமலை பேசினார்.