ஐயோ மீண்டும் மீண்டுமா? ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம் விலை!

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.640 உயர்ந்துள்ளது.

Gold Price Today update

சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440-ஆக இருந்த விலை, மாலையில் மேலும் ரூ.640 அதிகரித்து ரூ.1,02,080-ஆகியுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.12,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.காலை வேளையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,680, சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440-ஆக இருந்தது.

இப்படியான சூழலில், மாலை வேளையில் மீண்டும் அதே அளவு உயர்வு ஏற்பட்டு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.12,760, சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,02,080-ஆக மாறியுள்ளது. இந்த உயர்வு சர்வதேச சந்தை ஏற்றம் மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ளது.வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.9 அதிகரித்து ரூ.266-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வு முதலீட்டாளர்களுக்கு கவனத்தை ஏர்த்துள்ளது. தங்கம் – வெள்ளி விலை ஏற்ற இறக்கம் தொடர்வதால், நகை வாங்குபவர்கள் காத்திருக்கின்றனர்.இந்த விலை உயர்வு திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் குடும்பங்களுக்கு சுமையை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வது மத்திய வர்க்க மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக விலை மேலும் மாறுபடலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வாங்குபவர்கள் தூய்மை சான்று, எடை அளவு ஆகியவற்றைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.