அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு ஜாமீன் கிடைக்குமா ? நாளை கோவை நீதிமன்றம் தீர்ப்பு

Published by
Venu

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி  ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி.  ஆவார்.அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது  கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்தொலைக்காட்சி விவாதத்தில் ,மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்தார் .இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு இடையில் கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ,அதிமுகவின் இணையதளம் ,கொடி,லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை  தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் என்று அவர் மீது சூலூரைச் சேர்ந்த கந்தவேல் போலீசில் புகார் அளித்தார் .இந்தப் புகாரை தொடர்ந்து கோவை மாவட்ட சூலூர் போலீசார் அவரை கைது செய்தது.மேலும் நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் கீழ் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் பின்பு கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்ற நீதிபதி முன்  ஜர்படுத்தப்பட்டார்.அப்பொழுது , பழனிசாமியை   நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க ஆணை பிறப்பித்தார் .நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கு இடையில் சூலூர் நீதிமன்றத்தில்  ஜாமீன்கோரி  தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.இதன் காரணமாக மனு மீதான விசாரணையை இன்று (பிப்ரவரி 10-ஆம் தேதி) ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம்.இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பழனிசாமி ஜாமீன் மனு மீது  நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

Published by
Venu

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago