“போலி கணக்கு காற்றாலை மின்சார ஊழல்” பற்றி வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கூறிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகமே மின்வெட்டால் தத்தளிக்கும் போது, தூத்துக்குடி வட்டத்தில் உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக போலியான கணக்குக்காட்டி பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கும் அவலம்! காற்றாலை மின்சார ஊழல் குறித்து உடனே, லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
unknown nodeமின்துறையில் என்ன தவறு நடந்தாலும், தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, “போலி கணக்கு காற்றாலை மின்சார ஊழல்” பற்றி வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? இப்படியொரு ஊழலுக்கு துணைபோன அமைச்சர் தங்கமணி உடனடியாக பதவி விலகி, நியாயமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU