இந்திய மதிப்பில் சுமார் 4.7 கோடி ரூபாய் செலவழித்து மாடல் அழகி ஜெனிபர் பாம்ப்லோனா, கிம் கர்தாஷியனை போல முகத்தை மாற்றியுள்ளார்.
உலகத்தில் ரசிகர்கள் பலவிதத்த்தில் இருக்கிறார்கள், தனது ஆஸ்தான நடிகரின் படத்தை முதல் முதல் காட்சி கோநாட்டத்துடன் பார்ப்பது, அவர்கள் பெயரில் நலத்திட்ட உதவி செய்வது, பச்சை குத்தி கொள்வது என தாண்டி நீங்கள் நினைத்து கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து இருப்பர் ரசிகர்கள்.
unknown nodeஅப்படி ஒரு தீவிரமான ரசிகை செய்த செயல் தான் இன்று உலகம் முழுக்க வைரலாகி வருகிறது. ஒரு மாடல் அழகி அவர் பெயர் ஜெனிபர் பாம்ப்லோனா. இவருக்கு இன்னோர் மாடல் அழகியான கிம் கர்தாஷியனை மிகவும் பிடிக்குமாம்.
unknown nodeஆதலால் அவரை போல மாற வேண்டும் என முகத்தில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்காக மட்டுமே இந்திய மதிப்பில் சுமார் 4.7 கோடி ரூபாய் செலவழித்து உள்ளார். முகத்தை மாற்றிய பிறகு, அனைவரும் தன்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். முன்னர் இருந்தது போல என் வாழ்வு இல்லை என வருத்தப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் இந்திய மதிப்பில் 95 லட்ச ரூபாய் செலவு செய்து மீண்டும் தனது பழைய முகத்திற்கு மாறியுள்ளார் மாடல் ஜெனிபர் பாம்ப்லோனா . இதற்காக மொத்தமாக 40 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளாராம்.