பேஷன் ஷோவில் உலக தலைவர்களின் AI வீடியோ.! காரணம் எலான் மஸ்க் தான்…

Elon Musk – Fashion show

எலோன் மஸ்க் : ஏஐ வீடியோக்களிலேயே இதுதான் சிறந்த வீடியோ  என்பது போல் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தளத்தை கலக்கி வருகிறது.

அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவருமான எலான் மஸ்க் பகிர்ந்துள்ள செயற்கை நுண்ணறிவு அதாவது AI மூலம் உருவாக்கப்பட்ட பேஷன் ஷோவின் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரலான அந்த வீடியோவில், உலக தலைவர்கள் மிகவும் நவீன உடையில் நடப்பது காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், அமெரிக்காவில் நடந்து வரும் அரசியல் கொந்தளிப்பு முதல் சமீபத்திய மைக்ரோசாப்ட் செயலிழப்பு வரை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

கைது உடையில் டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மோடி, புடின், கிம் ஜோங் உன், போப் பிரான்சிஸ் என உலகத் தலைவர்கள் வித்தியாசமான உடையில் பேஷன் ஷோவில் நடந்து வருகின்றனர். இறுதியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் குளறுபடியையும்  கிண்டலடித்துள்ளார்.

அந்த வீடியோவில், பிரதமர் மோடி பல வண்ண நீண்ட கோட் அணிந்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. அவரது AI அவதாரமும் கருப்பு சன்கிளாஸ் அணிந்திருப்பதைக் காணலாம். கூடுதலாக, கமலா ஹாரிஸ் வரும் காட்சி பிகினி உடையில் உள்ளது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டாஸின் மார்க் ஜுக்கர்பெர்க், ஹிலாரி கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரும் வீடியோவில் தோன்றினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir