கொரோனா தொற்றால் லண்டனில் மரணித்த பாகிஸ்தான் ஸ்குவாஷ் நட்சத்திரம்.!

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ்

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாகிஸ்தான் ஸ்குவாஷ் முன்னாள் நட்சத்திர வீரர் ஆஸம் கான்பலியாகியுள்ளார். பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்று 1959, 1960, 1961 ஆகிய ஆண்டுகளில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். இவர் 1956ல் இருந்து இங்கிலாந்தில் வசித்து வந்துள்ளார்.

unknown node

95 வயதான இவர் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லண்டன் ஈலிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஆஸம் கான் கடந்த சனிக்கிழமை காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.