அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் மாயம்; 2 பேர் உயிரிழப்பு!

Two people have been killed and 10 others missing after a boat capsized off the coast of Key West in the US state of Florida.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அந்த படகில் இருந்த 2 பேர் பலியானதுடன், 10 பேர் மாயமாகி உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள தென் கிழக்கு பகுதியான புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று நேற்று மதியம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் கடலோர காவல் படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து படகில் இருந்த பயணிகளில் மேலும் 10 பேர் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது காணாமல் போன 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் இந்த படகு எந்த வகை படகு என்பது பற்றியோ அல்லது படகில் பயணித்த நபர்கள் யார் என்பது பற்றியோ எங்கிருந்து, எதற்காக வந்தார்கள் என்பது பற்றியோ எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.