பெல்ஜியத்தில் 25,000 ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள்..!

கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதன்படி அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,014 ஆக உயர்ந்துள்ளது.

பெல்ஜியத்தில் நேற்று சனிக்கிழமையோடு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்தது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில்19பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதன்படி அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை25,014ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில்1,449பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை10,68,406ஆக அதிகரித்துள்ளது.