கானா :சேர்ந்த இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியதே கைதுக்கு காரணம் என்று தெரிகிறது.எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரப் பேழையை (ஆர்க்) கட்டும் வீடியோக்கள் வைரலாகி உலக அளவில் பிரபலமானார்.
நோவாவின் பேழை போல மூன்று ஆண்டுகள் வெள்ளப்பெருக்கு வரும் என்று கூறி, மக்களை மனந்திரும்புமாறு அழைப்பு விடுத்தார். இதனால் அவரது ஊரில் பேழை கட்டும் இடம் சுற்றுலாத் தலமாக மாறியது. பலர் அங்கு சென்று பார்த்தனர்.கடந்த வாரம் எபோ நோவா தனது தீர்க்கதரிசனத்தை மாற்றினார். வெள்ளப்பெருக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றும், அதிக ஆர்க் கட்ட வேண்டும் என்று கடவுள் கூறியதாகவும் அறிவித்தார்.
இதற்கு முன் அவர் மக்களிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. புதிய கார் வாங்கியதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் அவர் “யாரிடமும் பணம் வாங்கவில்லை” என்று மறுத்தார்.கைது குறித்து கானா போலீசார் இதுவரை விரிவான தகவல் வெளியிடவில்லை. சைபர் கிரைம் தொடர்பான குற்றச்சாட்டுகள் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 31 மத விழாக்களுக்கு முன் ஆன்லைன் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் இந்தக் கைது நடந்துள்ளது. எபோ நோவாவுக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற தேதி போன்றவை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் அரசியல், மத பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இடைக்கால அரசு இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் போராட்டங்கள் தொடர்வதால் அரசியல் சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சி கவிழ்ந்த பிறகு நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது.
