பிரான்ஸ் :அதிபர் இமானுவேல் மேக்ரனும் அவரது மனைவி பிரிஜ்ஜிட் மேக்ரனும் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டபோது, மே 26 அன்று ஹனோய் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் தரையிறங்கியபோது, பிரிஜ்ஜிட் மேக்ரன் தனது கணவர் இமானுவேல் மேக்ரனை கன்னத்தில் அறைந்ததாகவும், பின்னர் விமானப் படிக்கட்டுகளில் இறங்கும்போது அவரது கையைப் பிடிக்க மறுத்ததாகவும் சமூக ஊடகங்களில், வீடியோ ஒன்று பரவி கொண்டு இருக்கிறது.
முதலில், பிரான்ஸ் அதிபரின் அலுவலகமான எலிசி அரண்மனை இந்தச் சம்பவத்தை மறுத்தது. ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது ஒரு “நட்பு ரீதியிலான குறும்புத்தனமான செயல்” என்று விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக இருவருடைய தரப்பில் இருந்தும் இந்த வீடியோ குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.
ஆனால், வீடியோவை பார்த்த பலரும் இமானுவேல் மேக்ரனை அவருடைய மனைவி பிரிஜ்ஜிட் கன்னத்தில் அறைந்ததாக கூறி வருகிறார்கள். அந்த வீடியோவை உற்றுநோக்கி கவனித்தீர்கள் என்றால் அவர் கன்னத்தில் அறையவில்லை முகத்தை பிடித்து மட்டும் தள்ளியிருப்பார். ஆனால், இதனை தெரியாமல் சிலர் மனைவி கன்னத்தில் அறைந்துவிட்டதாக பேசி வருகிறார்கள்.
முகத்தைபிடித்து தள்ளியது மட்டுமின்றி, கணவர் கை கொடுத்ததும் பிரிஜ்ஜிட் அதற்கும் மறுப்பு தெரிவித்து கோபத்துடன் நடந்து சென்றதால் இவர்களுடைய விவகாரம் கேள்வி குறியாக மாறியுள்ளது. பலரும் இருவருக்கும் இடையே ஏதோ பெரிய பிரச்சினை இருக்கிறது என்பது போல எல்லாம் கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள். உண்மையில் இந்த சம்பவம் கோபத்தில் நடந்ததா? அல்லது நகைச்சுவையாக நடந்ததா? என்பது குறித்து இருவருடைய தரப்பில் இருந்து விளக்கம் அளித்தால் தான் தெரியவரும்.
unknown node