ஜெர்மனில் மனித உடலை சாப்பிட்டு எலும்பை வீசிய பேராசிரியர் கைது!

A professor in Germany has been arrested on the Internet for allegedly killing a man after testing his penis for survival.

ஜெர்மனியில் உள்ள பேராசிரியர் ஒருவர் இணையதளத்தில் ஆண்குறி துண்டிக்கப்பட்டால் உயிருடன் இருக்க முடியுமா என்று சோதித்துப் பார்த்து அதன்பின் ஒரு மனிதரை கொலை செய்து உட்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியிலுள்ள பாங்கோவ் எனும் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கணிதம் மற்றும் வேதியியல் கற்பிக்கக் கூடியவர் தான் பேராசிரியர் ஆர்.ஸ்டீபன். இவர் நரமாமிசம் உட்கொள்வதில் சற்று ஆர்வம் உடையவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூங்காவில் எலும்புகளுடன் சதை இன்றி புதியதாக உயிரிழந்த ஒரு மனித உடல் கிடப்பதை கண்டு பூங்காவிலுள்ளவர்கள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து அந்த எலும்புகளை எடுத்து சோதனை செய்த காவல்துறையினர் இது தற்போது உள்ள புதிய எலும்பு என்று கண்டறியப்பட்டுள்ளதுடன், யாரோ சாப்பிட்டு உள்ளார்கள் என்பது குறித்தும் அறியப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சந்தேகிக்கப்பட்ட நபரான நரமாமிச உட்கொண்ணி பேராசிரியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அவரது மொபைல் போனை பரிசோதித்ததில் ஆண்குறி துண்டிக்கப்பட்ட பிறகு ஒரு மனிதன் உயிர் வாழ முடியுமா என அவர் இணையதள பக்கங்களில் ஆராய்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து அவரது வீட்டில் துப்பறியும் நபர்கள் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஒரு குளிரூட்டி, சக்கர வண்டி ரத்த கறைகள் இருந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்தது மின் இணைப்பு தொழில்நுட்ப வல்லுனரான ஸ்டீபன்ஸ் ஸ்ட்ரோட்ச் என்பவர் தான் என கண்டறியப்பட்டது. அவரது ரத்தங்கள் தான் இவரது வீட்டில் இருப்பதாகவும் தடவியல் நிபுணர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். மேலும் ஒரு டேடிங் இணையதளத்தில் இது குறித்து செய்திகள் பகிரப்பட்டதால், காவலர்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் தற்பொழுது கூறப்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து பேராசிரியர் நரமாமிசம் உட்கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.