இஸ்ரேலில் நடைபெற்ற விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி...! கூட்டநெரிசலில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு...! 50 பேர் காயம்...!

At least 28 people have been killed and more than 50 injured in a stampede during a holiday celebration in the northern city of Mount Maron, Israel.

இஸ்ரேலில், வடக்கே மவுண்ட் மெரான் என்ற பகுதியில், விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சியில்,  கூட்ட நெரிசலில் சிக்கி 28 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில், வடக்கே மவுண்ட் மெரான் என்ற பகுதியில், விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்ட நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 28 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். அவர்களை சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனை மற்றும் நகாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.