ஆண்டிவைரஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கியவ ஜான் சிறையில் தற்கொலை!

John McCabe, the creator of the world's most famous antivirus software, has committed suicide in prison.

உலகின் புகழ்பெற்ற நிறுவனமாகிய ஆண்டிவைரஸ் சாஃப்ட்வேரை உருவாக்கிய ஜான் மெக்காபி சிறையில் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் எனும் நிறுவனத்தை உருவாக்கிய ஜான் மெக்காபி ஸ்பெயின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். கேளிக்கைக்குரிய சில வீடியோக்களாலும் இவர் மிகப் பிரபலமான நிலையில் இருந்தார். இவர் எட்டு ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என 2019 ஆம் ஆண்டு கூறிய மெக்காபி, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் இவர் மீது கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு இருந்த நிலையில் இவர் பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இருந்த நிலையில், தற்பொழுது சிறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதையும் காரணம் இல்லாமல் நீண்ட நாள் சிறையில் அடைத்து வைத்தது தான் அவரது தற்கொலைக்கு காரணம் எனவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவரது மனைவியும் இது குறித்து எச்சரித்து இருந்ததாக கூறப்படுகிறது.