ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உரிமையாளர் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் பிடித்தார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் சி.இ.ஓ.வாக இருந்து வருபவர், எலான் மஸ்க். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்து, பணக்கார பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க், உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார். ஸுக்கர்பேர்க்கின் சொத்து மதிப்பு, தற்பொழுது 106 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
unknown nodeப்ளூம்பெர்க் பில்லியனர்கனின் பட்டியலின்படி, 184 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இரண்டாம் இடத்தில் 129 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ், மூன்றாம் இடத்தில் 106 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் மார்க் ஜுக்கர்பெர்க், நான்காம் இடத்தில் 102 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க், அவரை தொடர்ந்து, 102 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் பெர்னார்ட் அர்னால்ட் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.