நைஜீரியா கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு ....!

The death toll from an apartment building accident in Nigeria has risen to 36.

நைஜீரியா அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள லாகோஸ் மாவட்டத்தில் மாகாணத்தில் 21 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்துள்ளது.இந்த கட்டிட பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துள்ளனர்.  கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 36 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருவதுடன் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.