கொரோனா எதிரொலியால் ரெஸ்டாரண்டாக மாறிய விமானங்கள்!

கொரோனா எதிரொலியால் ரெஸ்டாரண்டாக மாறிய விமானங்கள்.

கொரோனா எதிரொலியால் ரெஸ்டாரண்டாக மாறிய விமானங்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு  அமல்படுத்தப்பட்ட நிலையில், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பொருளாதாரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான பணியாளர்கள் பலரும் வேலையை இழந்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை நிறுத்தியுள்ள நிலையில், அவர்களது விமானத்தில் மதிய உணவு மற்றும் இரவு உணவை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், உலகில் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ஜம்போஸ் விமானத்தில், வரும் அக்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், மதிய உணவு மற்றும் இரவு உணவு  விற்கப்படும் என்று ஆன்லைனில் அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியான அரை மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டுள்ளன. மேலும், மற்ற விமானங்களிலும் இதுபோன்று உணவு விற்கப்பட உள்ளது.