போர்த்துகீசிய அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசாவுக்கு கொரோனா.!

Portugal's President Marcelo Rebelo de Sousa has tested positive for coronavirus but has no symptoms, his office said on Monday

போர்த்துகீசிய அதிபர் மார்செலோ டி சவுசாரெபெலோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த அறிகுறிகளும் இல்லை என்று அதிபர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

72 வயதான இவர் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கிய ஜனாதிபதி விவாதத்தையும், புதன்கிழமை அறிவிக்க திட்டமிடப்பட்ட ஊரடங்கு விவரங்களைப் பற்றி விவாதிக்க சுகாதார நிபுணர்களுடன் ஒரு சந்திப்பும் ரத்து செய்பட்டது.

தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்ட அறிக்கையில், ரெபெலோ டி சவுசா அலுவலகம் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ஆகியோருக்கு இந்த நிலைமை குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளார். தற்போது, லிஸ்பனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.