தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்த இளம்பெண்.!

அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு என்ற இன நாயை வளர்த்து வருகிறார்.அந்த நாய்க்கு ஜாக்சன் என  செல்லமாக

அமெரிக்காவை சார்ந்த  எமிலி தளர்மோ என்ற இளம்பெண் கடந்த 5 வருடமாக ஜாக்சன் என்ற நாயை வளர்த்து வந்து உள்ளார்.

கடந்த வாரம் அந்த நாய் காணாமல் போனது.கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு என்ற இன நாயை வளர்த்து வருகிறார்.அந்த நாய்க்கு ஜாக்சன் என  செல்லமாக பெயரும் வைத்து வளர்த்து வந்து உள்ளார்.

கடந்த வாரம் எமிலி தளர்மோ அந்த நாயுடன் கடைக்கு சென்றார். அப்போது அந்த நாய் திடீரென காணாமல் போய்விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த எமிலி தளர்மோ பல இடங்களில் தனது நண்பர்களுடன் தேடியும் ஜாக்சன் கிடைக்கவில்லை.  ஜாக்சனை கடந்த 5 வருடமாக வளர்த்து வந்ததால் எமிலி மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

unknown node

இதைத்தொடர்ந்து  ஜாக்சன் போட்டோவை விமான பயணிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கொடுத்து விசாரித்தார். ஆனாலும் ஜாக்சனை கண்டுபிடிக்க முடிய வில்லை.பின்னர் ரூ.85,000  ஒரு  விமானத்தை  வாடகைக்கு எடுத்து சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஒக்லாந்து பகுதிகளில் 2 மணி நேரம்  ஜாக்சனை தேடி உள்ளார்.

மேலும் நாயின் புகைப்படத்துடன் கூடிய பேனரை விமானத்தில் கட்டி பறக்கவிட்டபடி ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.இந்நிலையில்  தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு 7 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்) பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.