அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் ஆலோசனை.!

The BJP is holding talks with the AIADMK at 2 pm on the issue of constituency distribution.

தொகுதி பங்கீடு தொடர்பாக மதியம் 2 மணி அளவில் அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அந்த வகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த 2 நாட்களாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதில் முடிவுகள் எடுக்காத நிலையில், இன்று மதியம் 2 மணி அளவில் மீண்டும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக ஈடுபடவுள்ளது. விரைவில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.