"எம்.ஜி.ஆர். மாளிகையான"- அதிமுக தலைமை அலுவலகம்!

AIADMK Headquarters - No more "MGR maaligai"!

சென்னை:ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிமுகவின் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ என பெயர் சூட்டப்படும் என்று அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ என தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது.அதன்படி,அலுவலகத்தின் முன்பு “எம்.ஜி.ஆர். மாளிகை” என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.