மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபத்து... கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதி...

நேற்று பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பாடியில் பாரதிய ஜனதா கட்சியின்  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கட்சி நிர்வாகியை வரவேற்று பட்டாசு கொளுத்தப்பட்டது. கேஸ் பலூன் மீது பட்டு வெடித்து சிதறியது.

unknown node

அப்போது, அங்கு நின்றிருந்த கட்சியினர் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் பத்திரிகையாளர் சிலரும் காயமடைந்தனர். இது குறித்து கொரட்டூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.