#Breaking: முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.!

Udayachandran IAS has been appointed as the Principal Secretary to Chief Minister MK Stalin.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே அதிரடியான 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்பவர் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node