#Breaking:விவாசயிகள் கடன் தள்ளுபடி வரம்பு – தமிழக அரசுக்கு அதிகாரம் – உச்சநீதிமன்றம்!

#Breaking: Debt waiver limit for farmers - Power to the Government of Tamil Nadu - Supreme Court!

எந்த விவசாயிக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி என்ற வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முந்தைய அரசு அரசாணை வெளியிட்டது.இதனை எதிர்த்து, விவசாயிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து,5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.ஆனால்,இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனையடுத்து,கடந்த நவ.12 ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி,விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும்,5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யும் போது அதை யாருக்கு செய்ய வேண்டும்? என்ற வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்,சிறு,குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரியே என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

5 ஏக்கருக்கு கீழ் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துஉச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.