அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இருந்து மாற்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை.
அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு புகார் மனுவை பரிசீலித்து, தனி நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவது குறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.