தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.இன்று திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.
unknown nodeஇந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள விழாது செய்தியில், மகாராஷ்டிரா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.இதேபோல் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் ,அவர்களுக்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவார்அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! மகாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்,.