தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் சற்று கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், பல்வேறு இடஙக்ளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.’ என கூறியுள்ளார்.
unknown node