#BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!!

Chief Minister Mk Stalin is in consultation with top officials over the continuation of the curfew in Tamil Nadu.

தமிழகத்தில் அடுத்த வாரம் வழங்கப்பட வேண்டிய கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கிய நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிவற்றிக்கு தடை இருந்தாலும், பலவற்றுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது மற்றும் ஊரடங்கை நீடிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சில பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடுவதால் அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. அதிகரிகளுடனான ஆலோசனை முடிந்த பின் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.