பதவியேற்பு விழாவில் ஆனந்த கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்..!

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவில் ஆனந்த கண்ணீர் விட்டார் துர்கா ஸ்டாலின்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவில் ஆனந்த கண்ணீர் விட்டார் துர்கா ஸ்டாலின்.

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா வைரஸ் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

சற்று நேரத்திற்கு முன் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’என்று கூறி மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

அப்போது, பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார். தற்போது தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், மீதமுள்ள 33 அமைச்சர்கள் தொடர்ந்து பதவியேற்று வருகின்றனர்.

பதவியேற்பு விழாவில் ஆனந்த கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்..!