அதிமுகவினரை அழைக்கவில்லை, அமமுகவினரையே அழைத்துள்ளார் – அமைச்சர் ஜெயக்குமார்

Minister Jayakumar commented on Sasikala's statement that the siblings would unite.

உடன்பிறப்புகள் ஒன்றாக இணைவோம் என்று சசிகலா கூறியது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் தினமான இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் இருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. இதன்பின் பேசிய சசிகலா, 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும். அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் எனவும் கூறினார். இந்நிலையில், உடன்பிறப்புகள் ஒன்றாக இணைவோம் என்று சசிகலா கூறியது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அதிமுகவினரை அழைக்கவில்லை, அமமுகவினரையே அழைத்துள்ளார் என்று மைச்சர் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.