அடுத்த மாதம் (டிசம்பர்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை அடுத்து அவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், உலக அமைதிக்கு வேண்டியும் , ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ராவ் தருமபுரி அதியமான் கோட்டையில் உள்ள தட்சணாகாசி பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
unknown nodeஅதன் பின்னர் பேசிய ரஜினி சகோதரர், ‘உலக அமைதிக்காகவும்,அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் பூஜைகள் நடைபெற்றது. ரஜினி மிகவும் நல்லவர். அவர் குழந்தை மனம் கொண்டவர். அனைவர்க்கும் நல்லதே செய்வார்.ரஜினி நல்லது செய்வார் என மக்கள் நம்புகின்றனர். ரஜினி கூறிய அரசியல் வெற்றிடம் தற்போது விவாத மேடையாக மாறியுள்ளது. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா இல்லையா என மக்கள்தான் கூற வேண்டும். ‘ என தனது கருத்தை தெரிவித்தார்.