ஷாக் அடிக்கும் மின்கட்டணம்- மு.க.ஸ்டாலின்

ஷாக் அடிக்கும் மின்கட்டணம்! https://t.co/4eSh3LpjkM

ஷாக் அடிக்கும் மின்கட்டணம் என்று  மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைமை அறிவிப்பு வெளியிட்டது.திமுகவினர் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில்,தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது கிடையாது.மத்திய பிரதேசம்,கேரளா  மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மின்சார கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு சலுகை தர  தமிழக அரசுக்கு பணமில்லையா? அல்லது மனமில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம் சேருகிறது.கொரோனாவை விட மக்கள் மின் கட்டணத்தை கண்டு பயப்படுகின்றனர்  என்று தெரிவித்துள்ளார்.

unknown node