தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை உரிமை கோருகிறார் முக ஸ்டாலின்!!

DMK leader Mk Stalin is meeting the governor tomorrow to demand the right to rule in Tamil Nadu.

தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து வரும் 7ம் தேதி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் முக ஸ்டாலின்.

இதனிடையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின் பங்கேற்கும் விழா குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் செயலர், சட்டப்பேரவை செயலர், டிஜிபி உள்ளிட்டோருடன் தலைமை செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா எப்படி நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.