நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது! – எச்.ராஜா கண்டனம்!

அண்மையில் நடைபெற்ற தனது அறக்கட்டளை மூலம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ' தமிழகத்தில் 30 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து

அண்மையில் நடைபெற்ற தனது அறக்கட்டளை மூலம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ‘ தமிழகத்தில் 30 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். இவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயாராவார்கள். அரசு பள்ளிகளை மூடுவது அங்குள்ள கிராமபுற மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கிறது.’ என பேசினார்.

இதற்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘ புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா எதனையும் முழுதாக தெரியாமல் கருத்து கூறுவது வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும், ஹிந்திக்கு எதிர்ப்பாக இருக்கும் திமுகவினர் வீட்டின் முன்பு போராட்டங்கள் நடைபெறும் என குறிப்பிட்டார்.