திமுகவிடம் இருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் – எல் முருகன்

BJP state president L Murugan has criticized Stalin for calling the central government's plans Vision 7.

மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருவதாக பாஜக மாநில தலைவர் எல் முருகன் விமர்ச்சித்துள்ளார்.

திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சமூகநீதி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்புத்துறை ஆகியவை அடுத்த பத்தாண்டுகளில் வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், திமுக அறிவித்த எழில்மிகு மாநகர திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருகிறார். விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவர் என்று கேட்டுள்ளார். ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விமர்ச்சித்துள்ளார்.