நாளை தமிழக சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்.!!

The revised financial position report of the Government of Tamil Nadu for the financial year 2021-22 will be tabled in the Legislative Assembly tomorrow.

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான திருத்திய நிதி நிலை அறிக்கை சட்டப் பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக நாளை சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள  கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது.

நாளை பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த முறையாக இ-பட்ஜெட்டாக (காகிதமில்லா) தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் ஆக.16 தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வரான பிறகு தாக்கலாகும் முதல் நிதி நிலை அறிக்கை என்பதால் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.