திமுகவுடனான பேச்சுவார்த்தையை விசிக புறக்கணிக்கவில்லை- திருமாவளவன்..!

Thirumavalavan said VCK did not ignore the talks with DMK

திமுகவுடனான பேச்சுவார்த்தையை விசிக புறக்கணிக்கவில்லை என திருமாவளவன் கூறினார்.

திமுகவுடனான கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கும் என திருமாவளவன் தெரிவித்தார். மூன்றாவது அணியில் விசிக இணைந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்பது பொருத்தமற்ற கேள்வி என்று கூறினார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் விசிக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று மாலை மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடனான பேச்சுவார்த்தையை  புறக்கணித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில்,  திமுகவுடனான பேச்சுவார்த்தையை விசிக புறக்கணிக்கவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். திமுகவுடன் விசிக  இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.