திமுகவுக்கு இந்த முறை அது எடுபடாது – முதல்வர் பழனிசாமி

AIADMK is a party that reflects the thoughts of the people, said Karur Chief Minister Palanisamy in a campaign.

அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது என கரூரில் முதல்வர் பழனிசாமி பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

கரூரில் அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொய் பேசியே ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தமுறை அது எடுபடாது என விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாங்கிய மனு என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக மீது எவ்வளவு குற்றசாட்டு கூறினாலும் அதை பொய் என நிரூபிப்போம் என்றும் திமுக ஆட்சியில் 220 டெண்டர்கள் ஒருவருக்கே கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். நான் முதல்வர் என்று எப்போதும் நினைத்து பார்த்ததில்லை, மக்கள் தான் முதல்வர் என்றும் அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.