நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்! உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசிக்க உள்ளனர்.இந்த அமைச்சரவை கூட்டத்தில் ,உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனைகள்,  தொழில் துறையில் ஒப்பந்தமாக உள்ள புதிய கொள்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளனர். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்ய கோரிய ஆலோசனையும் நடைபெற உள்ளது. தலைமை தகவல் ஆணையர் தேர்வு முறை பற்றியும் விவாதிக்க உள்ளனர்.முக்கியமாக பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கைகள் பற்றியும், இதில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாம்.