2-வது டெஸ்ட்:இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு...!சமி அபார பந்துவீச்சு ...!

2-வது டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி இந்திய அணி  287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி

2-வது டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி இந்திய அணி  287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சின் முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 326 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.இன்று களமிறங்கிய இந்திய அணி 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முரளி விஜய் ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். ராகுல் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மூன்றாவதாக புஜாரா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.அடுத்ததாக சேர்ந்த ரஹானே – கோலி ஜோடியினர் நிதானமான ஆடி இந்திய அணிக்கு வலுசேர்த்தனர். கோலி சிறப்பாக ஆடி தனது 25வைத்து சதத்தை பூர்த்தி செய்தார்.

3-ம் நாள் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

unknown node

இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. இறுதியாக 3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. .இந்நிலையில் 4-ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.இதில் ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 243 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 72 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் சமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் ஆஸ்திரேலிய அணி இந்திய அணி  287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.