இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் , ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் தவான் 2 ரன்னில் வெளியேற பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்கினார்.
நிதானமாக விளையாடி அந்த ரோகித் சர்மா 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடிய விராட் கோலி சதம் விளாசினார். இதனால் இந்திய அணியின் எண்ணிக்கை உயர்ந்த்து.கோலி 125 பந்தில் 120 ரன்கள் குவித்தார்.
unknown nodeபின்னர் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் நிறைவு செய்து 71 ரன்கள் எடுத்தார்.இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 279 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கார்லோஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.